இலங்கை சுற்றுலா வளர்ச்சிக்கு இந்தியா உதவும்

விரைவில் ஏர் இந்தியா விமானம் சார்பில் வாரணாசியில் இருந்து கொழும்புவிற்கு விமானச் சேவை செயல்படுத்தப்படும் என்றும் அந்தச் சேவை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என்றும் இந்தச் சேவையின் மூலம் இலங்கையின் சுற்றுலா வளர்ச்சிக்கு இந்தியா உதவும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இலங்கைத் தலைநகர் கொழும்பு - வாரணாசி இடையே நேரடி விமானச் சேவை ஆகஸ்டில் தொடங்கப்படும் என்று அண்மையில் விசாக தின விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். கடந்த 2 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக மோடி மேற்கொண்ட பயணமாகும் இது.