காஷ்மீர் எல்லையில் பாக். பீரங்கி தாக்குதல்

ஸ்ரீநகர்: இந்தியா மீதான பாகிஸ் தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல் இரண்டாவது நாளாக தொடர்ந்த நிலையில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வசிப்பிடங்களைவிட்டு வெளியேறி உள்ளனர். மேலும் அப்பகுதியில் 51 பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டம் நவ்ஷெளரா அருகே உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய நிலைகள் மீதும் கிராமங்கள் மீதும் பாகிஸ் தான் ராணுவம் சிறிய ரக துப்பாக்கிகள், சிறிய ரக பீரங்கிகள் மூலம் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.

எனினும் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் எல்லையோர கிராம மக்கள் 2 பேர் பலியாயினர், 3 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், 2வது நாளாக சித்திபக்ரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக ரஜோரி மாவட்ட காவல்துறை துணை ஆணையர் ஷாஹித் இக்பால் சௌத்ரி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, "மஞ்சகோட் பகுதி யிலும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் 7 கிராமங்களில் உள்ள குடியிருப்பு கள், கட்டடங்கள் சேதம் அடைந்து உள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!