சீரழித்த பின் செங்கற்களால் தாக்கி பெண்ணைக் கொன்ற கும்பல்

இளம்பெண் ஒருவரை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த கும் பல் ஒன்று அந்தப் பெண்ணின் தலையை செங்கற்களால் தாக்கி படுகொலை செய்துள்ளது. வட இந்தியாவின் ஹரியானா மாநிலம் ரோத்தக் நகரின் அருகே உள்ள சோனிபட் என்னும் இடத் தில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்ததாக போலிசார் நேற்று தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் மேலும் ஆறு பேர் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் அஷ்வின் ஷென்வி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித் தார். சம்பவம் நடந்த சோனிபட்டில் தான் அந்த 23 வயதுப் பெண் வசித்து வந்தார்.

கூலித்தொழி லாளியான அவரை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆடவர் கும்பல் ஒன்று தூக்கிச் சென்றது. கும்பலில் இருந்த ஓர் ஆடவர் அப்பெண்ணுக்கு அறிமுகம் ஆனவர் என்று கூறப்பட்டது. கும்பலில் இருந்த அனைவரும் கூட்டாக அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ததாகவும் கடந்த வியாழக்கிழமை திறந்த வெளியில் அவரது உடல் கண் டெடுக்கப்பட்டதாகவும் அஷ்வின் கூறினார். தாம் சீரழிக்கப்பட்டது குறித்து போலிசில் புகார் செய்யப்போவதாக அந்தப் பெண் கூறியதைத் தொடர்ந்து அருகில் கிடந்த செங்கற்களை எடுத்து அவரது தலையில் பலமுறை அடித்து அந்தப் பெண்ணை கும்பல் கொன்றதாகவும் இது ஒரு கொடூரச் செயல் என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!