பெரியகுளத்தில் சூறாவளியுடன் பலத்த மழை

பெரியகுளம்: குளிர்வித்த கோடை மழை; 200 மின் கம்பங்கள் சேதம் தேனி: தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலை யில், ஆங்காங்கே கோடை மழை பெய்வது மக்களுக்கு ஆறுதலைத் தந்துள்ளது. எனினும் பெரிய குளத்தில் பெய்த கோடை மழை காரணமாக அப்பகுதியில் ஏராள மான மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. தற்போது அக்னி நட்சத்திர காலம் என்பதால் தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. சென்னை, வேலூர், திருச்சி உள் ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நூறு டிகிரிக்கும் மேலாக வெயில் கொளுத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளது.

இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் சூறாவளியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு பெய்யத் தொடங்கிய மழை சில மணி நேரங்கள் நீடித்தது. இதனால் பெரியகுளத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதையடுத்து கிராமப்புறங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. பல இடங்களில் பத்து மணி நேரத்துக் கும் மேலாக மின்தடை நீடித்தது. மேலும், பெரியகுளத்தில் நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களும் சரிந்தன. சங்கரமூர்த்திபட்டி, ஜெயமங்கலம், குள்ளப்புரம், லட்சுமிபுரம், ஜல்லிப் பட்டி பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த இந்த மரங்கள் சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தவிர, பல இடங்களில் சாலை யோர மரங்களும் சரிந்ததில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே சிந்துவம்பட்டி, நாகம்பட்டி, முதலக்கம்பட்டி, குள் ளப்புரம் கிராமங்களில் இருபதுக் கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை, சூறாவளிக் காற்றால் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கணக் கிடும் பணி தற்போது துவங்கி யுள்ளது. அதேவேளையில் சீர மைப்புப் பணிகளும் துவங்கியிருப் பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.2017-05-23 06:00:00 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!