சுடச் சுடச் செய்திகள்

விசா இன்றி 24 ஆண்டுகள்: சவூதியில் தங்கியிருந்த தமிழர் நாடு திரும்புகிறார்

சென்னை: முறையான ஆவணங்கள், விசா இல்லாமல் வெளிநாடுகளில் சில நாட்கள் தங்குவதே பெரும் குற்றமாகிவிட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சவூதி அரேபியாவில் தொடர்ந்து 24 ஆண்டுகள் சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ஞானபிரகாசம் ராஜமரியான் என்ற அந்நபருக்கு தற்போது 52 வயதாகிறது. கடந்த 1994ஆம் ஆண்டு அவருக்கு சவூதியில் உள்ள பண்ணையில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் உரிய ஊதியம் கிடைக்காததால், பண்ணையில் இருந்து தப்பிச் சென்று பாலைவனப் பகுதியில் தலைமறைவானார் ஞானபிரகாசம்.

பின்னர் அங்கேயே ஒரு வேலையைத் தேடிக்கொண்ட அவரால் நாடு திரும்ப முடியவில்லை. மாதந்தோறும் தனது குடும்பத்துக்குப் பணம் அனுப்ப மட்டும் தவறியதில்லை. இவர் சவூதி அரேபியா சென்றபோது சிறு குழந்தைகளாக இருந்த 4 மகள்களும் இப்போது திருமணம் செய்துகொண்டு, குடும்பம் நடத்தி வருகின்றனர். 1994க்குப் பிறகு இவர்களை ஞான பிரகாசம் ஒருமுறை கூட சந்தித்ததில்லை, திருமணத்துக் கும் வந்ததில்லை. இந்நிலையில் சமூக ஆர்வலர் ஒருவரது உதவியுடன், 24 ஆண்டு உள்ளார் ஞானபிரகாசம். விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக சவூதியில் வசிக் கும் பிற நாட்டவருக்கு 90 நாட்கள் கருணை காலம் கொடுத்துள்ளது

அந்நாட்டு அரசு. அதன் பிறகும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. இத்தகைய வாய்ப்பை பயன்படுத்தியே தாய்நாடு திரும்ப ஞானபிரகாசத்துக்கு அனுமதி கிடைத்து இருப்பதாகக் கருதப்படு கிறது. எனினும் அவரைப் பற்றி தமிழக அரசோ, மத்திய வெளி யுறவு அமைச்சகமோ எந்தத் தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ, ஞானபிரகாசத்தின் குடும்ப உறுப் பினர்கள் அவரது வருகையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon