தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உள்ளாவது புதிதல்ல - ராமதாஸ்

சென்னை: ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான விமர்சனம் மிகவும் அவசியம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான விமர்சனங் களை ஆலோசனைகளாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, அதைச் செய்தவர்களை எதிரிகளாக நினைத்து அவர்க ளுடன் போரிட ஆணையம் துடிக்கக்கூடாது என அவர் அறிக்கை ஒன்றில் அறிவுறுத்தி உள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஐயத்திற்கு அப்பாற்பட்டு செயல் பட வேண்டிய ஆணையம் அதன் செயல்பாடுகளை யாரும் விமர் சிக்கக்கூடாது என்ற மன நிலைக்கு ஆளாகியிருப்பது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட ஆபத்து எனக் கவலை தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உள்ளாவது புதிதல்ல என்றும்,காலம் காலமாகவே அதன் செயல்பாடுகள் விமர்சிக்கப் பட்டுத்தான் வருகிறது என்றும் ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.

“ஜனநாயகமும், விழிப்புணர் வும் அதிகரித்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் கூட கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. “இத்தகைய நீதிமன்றங்க ளுக்குக்கூட நீதிமன்ற அவ மதிப்பு வழக்குத் தொடர்ந்து விமர்சனம் செய்பவர்களை தண் டிக்கக்கூடாது என்ற கோரிக் கைகள் எழுந்து வரும் நிலையில், தம்மை விமர்சிப்பவர்களை தண்டிக்கும் அதிகாரம் வழங்கப் படவேண்டும் என தேர்தல் ஆணையம் கோருவது சர்வாதி காரமாகும். இதை ஒருபோதும் ஏற்க முடியாது,” என ராமதாஸ் தமது அறிக்கையில் மேலும் தெரி வித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon