சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி மீண்டும் இடிந்து விழுந்தது

சென்னை: கட்டட இடிப்புப் பணியின் போது சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது. கடந்த வாரம் இப்பணியின் போது இதே போல் ஒருமுறை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒரு தொழிலாளர் பலியானார். இதையடுத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த கட்டட இடிப்புப் பணி நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது. அப்போது கட்டடத்தின் மற்றொரு பகுதி இடிந்து விழுந்ததால் பெரும் புகை மண்டலம் மூண்டது. உயிரிழப்பு ஏதுமில்லை என்றாலும், இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.