தினகரன்: கட்சியைக் கொடு, இல்லையேல் ஆட்சி கவிழும்

அதிமுகவின் அசைக்க முடியாத இரும்புத் தலைவியாக இருந்த ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு கட்சியைக் கைப்பற்றிவிட லாம் என்று நம்பி காய்களை நகர்த்திய சசிகலா தரப்பினர் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகிவிட்ட நிலையில், கடைசி ஆயுதமாக ஆட்சிக் கலைப்பு மிரட்டலை அந்தத் தரப்பு கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருக் கின்ற டிடிவி தினகரன், தான் செயல் அளவில் எதையும் செய்ய முடியாத சூழ்நிலையில் இருப்ப தாக உணர்கிறார்.

இந்தச் சூழலில் அதிமுகவை தம் வசம் ஒப்படைக்காவிட்டால் ஆட்சியைக் கவிழ்ப்பது உறுதி என்று அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சி விவகாரத்தில் பழனி சாமி தலையிடக்கூடாது என் பதில் தினகரன் உறுதியாக இருப்பதாகவும் இதைப் பொறுத்த வரையில் சசிகலாவைப் போல் ஏமாந்துவிட அவர் தயாராக இல்லை என்றும் அந்தத் தரப்பு கள் சூசகமாகக் குறிப்பிட்டன. சட்டமன்றத்தில் தனக்கு ஆதரவான எம்எல்ஏக்களை அடிப்படையாக வைத்து விரை வில் தினகரனே ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தாக்கல் செய்யும் முடிவில் இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முடிவை பழனிசாமி யிடம் தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்து இருப்பதாக கூறப் படுகிறது. இருந்தாலும் பழனி சாமி இதைப் பற்றி அவ்வளவாக பெரிதுப்படுத்தவில்லை என்று கட்சியினர் சிலர் கூறினர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon