விளம்பரம் தேடுவது மட்டுமே அரசாங்கத்தின் கடமையல்ல - குஷ்பு

சென்னை: விளம்பரம் தேடுவது மட்டுமே ஓர் அரசாங்கத்தின் கடமையல்ல என்று நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரு மான குஷ்பு கூறியுள்ளார். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட் டிருப்பது குறித்து அண்மைய பேட்டியில் கருத்து தெரிவித்துள்ள அவர், காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் தங்களது திட்டம் போல் மத்திய பாஜக அரசு விளம்பரப்படுத்துவதாகச் சாடியுள்ளார். தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் குஷ்பு அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தமிழகத்தில் நடைபெறும் ஆட் சியை வேடிக்கையாகவும் நகைச் சுவையாகவும்தான் அனைவரும் பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். “தமிழக அரசியல் நிலவரங்க ளைப் பார்த்து வெளிநாடுகளில் வாழ்பவர்கள் எல்லாம் கிண்டல் செய்கின்றனர். ஜிஎஸ்டி வரியை பாஜக கொண்டு வந்தது போல பிரதமர் மோடி விளம்பரம் தேடுகி றார். ஜிஎஸ்டி காங்கிரஸ் ஆட்சி யில்தான் கொண்டு வரப்பட்டது. “18 விழுக்காட்டிற்கும் மேல் வரி விதித்தால், மிகப்பெரிய ஆபத்தாகிவிடும் என ராகுல் ஏற்கெனவே கூறினார். காங்கிரஸ், ஒரு திட்டத்தைக் கொண்டு வரும்போது மக்களின் சாதக, பாதகங்களைப் பார்க்கும்,” என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட தால் பல அத்தியாவசியப் பொருட் கள் ஏழை மக்களின் கைக்கு எட்டாத தூரத்துக்குச் சென்று விடும் என்று கவலை தெரிவித் துள்ள அவர், நாட்டில் இனி ஊழல் நடக்காது, அதிகாரிகள் லஞ்சம் வாங்கமாட்டார்கள் எனக் கூற முடியுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். “முன்பு காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் இவர்கள் (பாஜக) கொண்டு வந் தது போல ‘ஸ்டிக்கர்’ ஒட்டி விளம்பரம் தேடுகின்றனர். விளம் பரம் தேடுவது மட்டுமே அரசின் கடமை அல்ல; வேலை நடக்க வேண்டும்,” என்று குஷ்பு தெரிவித்துள்ளார். திரைப்படங்களுக்கு 30 விழுக் காடு வரி விதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதற்கு மேல் தமிழக அரசும் வரி விதிக்க உள்ளதாகவும் திரைத்துறைக் கான வரியைக் குறைக்காவிட்டால் வரும் நாட்களில் அத்தொழிலுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என் றும் கவலை தெரிவித்துள்ளார்.