சுடச் சுடச் செய்திகள்

தேர்தல்: சென்னையில் ஆதரவு திரட்டிய அதிபர் வேட்பாளர்கள்

சென்னை: அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த், மீரா குமார் ஆகிய இருவரும் தங்களுக்கு ஆதரவு திரட்டுவதற் காக நேற்று முன்தினம் சென்னை வந்தனர். இருவரும் தங்களை ஆதரிக்க முன்வந்துள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந் தித்துப் பேசினர். அதிபர் தேர்தலுக்கான பாஜக அணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், எளிய விவசாய குடும் பத்தில் பிறந்து வளர்ந்தவர் என் றும் தமது கடின உழைப்பினால் வாழ்க்கையில் உயர்ந்தவர் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள் ளார். எனவே ராம்நாத் கோவிந்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி அணியைச் சேர்ந்த சட்டப்பேரவை, நாடாளு மன்ற உறுப்பினர்களை கலைவா ணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது சந்தித்தார் ராம்நாத் கோவிந்த். இதேபோல் ஓ.பன்னீர்செல்வத் தையும் அவர் சந்தித்தார். இதற்கிடையே அதிபர் தேர்த லில் எதிர்க்கட்சிகளின் சார்பில் களமிறக்கப்பட்டுள்ள மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து ஆதரவு கோரினார். அவரைக் கையை உயர்த்தி கருணாநிதி வாழ்த்தியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் பழனிசாமி தரப்பைச் சந்தித்த ராம்நாத். படம்: சதீஷ்

முதல்வர் பழனிசாமி தரப்பைச் சந்தித்த ராம்நாத். படம்: சதீஷ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon