எருதுப் போட்டிக்கு சட்டபூர்வ அனுமதி

புதுடெல்லி: தமிழகத்தில் உள்ள ஜல்லிக்கட்டு போட்டியைப் போல கர்நாடகாவில் பாரம்பரியமிக்க விளையாட்டு கம்பாலா எருது போட்டி. சேறும் நீரும் கலந்த வயல் வெளிகளில் 2 எருதுகளைப் பூட்டி வேகமாக ஓட்டிச்செல்ல வேண்டும். இதில் வெற்றி பெறும் எருதுகளை ஓட்டிச் சென்ற விவசாயிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும். நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கம்பாலா போட்டிக் குத் தடை விதிக்கப்பட்டு இருந் தது. இதையடுத்து கர்நாடக மாநில அரசு கம்பாலா போட்டி நடத்த அவசர சட்ட மசோதாவை அந்த மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

இந்த மசோதாவுக்கு அதிபர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் கம்பாலா போட்டி இனி அதிகாரபூர்வமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடாகாவின் பாரம்பரிய விளையாட்டான கம்பாலா எனும் எருதுப் போட்டிக்கு சட்டபூர்வ அனுமதி கிடைத்துள்ளது. படம்: ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon