தமிழக அரசின் கையாலாகாத போக்கு: ஸ்டாலின் கடும் விமர்சனம்

சென்னை: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும் மேகதாது அணை விஷயத்தில், தமிழக அரசால் உச்ச நீதிமன்றத்தை நாடி உடனடியாக தடையுத்தரவு பெற முடியவில்லை என்பது வருத்தம் அளிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி தலைமையிலான குதிரைப் பேர அரசின் கையாலாகாத போக்கை இது எடுத்துக் காட்டுவதாக அறிக்கை ஒன்றில் அவர் விமர்சித்துள்ளார். “தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகளின் எதிர்காலத்தை இருள்மயமாக்கும் இந்தப் பிரச்சினையில் அதிமுக அரசு வழக்கம் போல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டு, குறட்டை விட்டுத் தூங்கக்கூடாது. “உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை முதல்வர் கூட்டவேண்டும். அக்கூட்டத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக மாநிலம் கட்ட முயற்சிக்கும் அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,” என ஸ்டாலின் தமது அறிக்கையில் மேலும் வலியுறுத்தி உள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு சுபாஷ் சீனிவாசன் தேவிபட்டினத்தில் பணியாற்றியபோது, அனாதை பிணங்களை அடக்கம் செய்வது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். படம்: ஊடகம்

07 Dec 2019

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் போலிஸ் அதிகாரி விண்ணப்பம்

மக்களவையில் பேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2014ஆம் ஆண்டிலிருந்து இது வரையில் 3.18  லட்சம் குழந்தைகளைக் காணவில்லை என்று தெரிவித்தார். படம்: ஊடகம்

07 Dec 2019

இந்தியாவில் 3.18 லட்சம் குழந்தைகள் மாயம்