தமிழகத்தில் மருந்து பற்றாக்குறை

சென்னை: இந்தியாவில் பொருள் சேவை வரி அறிமுகமான ஜூலை 1ஆம் தேதியிலிருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் முக்கிய மருந்து களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. புதிய வரி முறைகளில் நிச்சயமில்லாத விநியோகிப்பாளர்களில் பலர், விநியோகிப்பிலும் மென்பொருள் தொடர்பான பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். இதனால் மருந்துகளை விநியோ கிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மகனுக்கு மருந்து வாங்குவதற் காகப் பத்து கடைகளுக்கு மேல் ஏறி இறங்கிய கார்த்திக் நாகப்பன் என்பவர், “நிலைமை சற்று மோச மாகத்தான் உள்ளது,” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தீபம் மருத்துவமனையின் மருத் துவர் டி.என். ரவி ஷங்கர், குறிப்பாக நீரிழிவு, உயர் ரத்தம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிரமம் அதிகம்,” என்றார். ஆனால் இது, ஏற்கெனவே எதிர் பார்க்கப்பட்ட ஆரம்பக்கட்ட பிரச் சினைதான் என்றும் கூடிய விரைவில் நிலைமை வழமைக்குத் திரும்பும் என்றும் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon