ஜிஎஸ்டி உயர்வால் வெறிச்சோடிக்கிடக்கும் திரையரங்குகள்

தமிழகத்தில் திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்பதற்கான கட் டணம் கிட்டத்தட்ட இருமடங்கு வரை உயர்த்தப்பட்டதால் பார்வை யாளர்களின் கூட்டம் குறைந்தது. இந்தியாவில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி யில் திரையரங்குகளுக்கு 28 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது. இதுபோக, மாநில அரசு 30 விழுக்காடு கேளிக்கை வரியும் நீடிக்கிறது. இந்த இரட்டை வரிவிதிப்பு முறையால் தொழில் பெரிதாகப் பாதிக்கும் என்று கருதிய தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் காட்சிகளை ரத்து செய்து போராட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும் சுமார் ஆயிரம் திரையரங்குளில் காட்சி கள் ரத்து செய்யப்பட்டன.

இத னால், நாள் ஒன்றுக்கு 20 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்ட தாகக் கூறப்பட்டது. கேளிக்கை வரியை ரத்து செய்ய மாநில அரசை வலியுறுத்தி தொடங்கப்பட்ட போராட்டம் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையால் முடிவுக்கு வந்தது. போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாக தமிழ் திரைப் பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்தார். டிக்கெட் விலையுடன் 28 விழுக்காடு ஜிஎஸ்டியும் சேர்த்து வசூலிக்கப்படும் என்றும் அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து நேற்று முதல் திரையரங்குகள் வழக்கம்போல செயல்படத் தொடங்கின. திரைப்படம் பார்ப் பதற்கான இணையப் பதிவு நேற்று முன்தினம் இரவு மீண்டும் தொடங்கியது.

காட்சிகளைத் திரையிடத் தயாரான சென்னை திரையரங்கு ஒன்று. படம்: ஊடகம்

Loading...
Load next