சகோதரரின் மனைவியுடன் ‘செல்ஃபி’ எடுத்தவர் கொலை

சென்னை: சகோதரரின் மனைவி யுடன் செல்ஃபி எடுத்ததால் தன் னுயிரை இழந்தார் ஒருவர். அண்ணாமலை பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்த அலுவலக உதவி யாளர் எஸ். ராஜேந்திராவின் செல்ஃபி கொலையில் முடிந்துள்ளது. கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள 31 வயது வெங்கட் ரமணாவும் அதே பல்கலைக் கழ கத்தில் அலுவலக உதவியாள ராகப் பணியாற்றுகிறார். தேனாம்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் ரோட்டில் இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கொல்லப்பட்ட எஸ். ராஜேந்திரா மும்பையில் உள்ள பல்கலைக்கழக கிளையில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். நான்கு மாதங்களுக்கு முன்புதான் சிதம் பரத்தில் உள்ள பல்கலைக் கழகத்துக்கு அவர் மாற்றப்பட்டார். இதற்கிடையே ஒரு மாதத்துக்கு முன்பு விடுமுறையில் இருந்த ராஜேந்திரா, ராஜா அண்ணாமலை புரத்தில் குட்டி கிராமணி தெரு வில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். அதே வீட்டில்தான் 33 வயது மற்றொரு சகோதரரான புலேந்திரனும் தனது குடும்பத் துடன் வசித்துவந்தார்.

சென்ற வியாழக்கிழமை இரவு சகோதரர்களில் இளையவரான வெங்கட்ரமணா மூத்த அண் ணனை வீட்டில் நடக்கும் பூசையில் கலந்துகொள்ள அழைத்திருந்தார். இதை ஏற்று ராஜேந்திராவும் பூசையில் கலந்துகொண்டார். அப்போது வீட்டின் மொட்டை மாடியில் மூன்று சகோதரர்களும் மதுபானங்கள் குடித்தனர். அந்த சமயத்தில் வெங்கட்ர மணாவின் மனைவியுடன் செல்ஃபி எடுத்து அந்தப்படத்தை ‘வாட்ஸ்அப்’ மூலம் ராஜேந்திரா அனுப்பினார்.

இதனை அறிந்த வெங்கட்ரமணா சகோதரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது, பின்னர் கைகலப்பாக மாறியது. மூன்றாவது சகோதரரான புலேந்திரன் அவர்களைத் தடுத்து சமாதானப்படுத்தினார். ஆனால் அதிகாலை 3.30 மணி அளவில் எழுந்த வெங்கட் ரமணா சகோதரர் ராஜேந்திராவைப் பலமுறை கத்தியால் குத்தினார். இதில் ராஜேந்திரா அதே இடத்தில் உயிரிழந்தார். போலிசார் விசாரணை தொடர்கிறது.2017-07-08 06:00:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேய் போன்ற வேடமிட்ட இவர்கள் வாகனங்களில் சென்றவர்களை பயமுறுத்தியதுடன் நில்லாமல் திறந்த வெளியில் தூங்கிக்கொண்டிருந்தவர்களையும் குறிவைத்ததாகத் தெரிகிறது. படம்: ஊடகம்

13 Nov 2019

பேய் வேடமிட்டு பதற வைத்த இளையர்களைக் கைது செய்து கதறவிட்ட அதிகாரிகள்

காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்

12 Nov 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி