சுடச் சுடச் செய்திகள்

விசாரணை அறிக்கையில் சந்தேகம்: சகாயம் வேதனை

சென்னை: மதுரையில் பரவலாக நடந்தேறியுள்ள கிரானைட் முறை கேடு தொடர்பான தமது அறிக்கையில் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமது அந்த அறிக்கையைச் சந்தேகிப்பது தமது நேர்மையையே சந்தேகிப்பதற்கு ஈடானது என்று அவர் வேதனையுடன் குறிப்பிட் டுள்ளார். மதுரையில் உள்ள கிரானைட் குவாரிகளில் பெருமளவில் முறை கேடுகள் அரங்கேறுவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பரவலாகப் புகார் எழுந்தது. இது குறித்து ஊடகங்களில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியா கின. கிரானைட் குவாரிகளில் வைத்து குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதாகவும் பலர் படுகொலை செய்யப்பட்டதாகவும் திகில் தகவல்களும் அவ்வப்போது வெளியாகின. முறைகேடு காரணமாக தமிழக அரசுக்குப் கோடிக் கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு சகாயம் தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

அவர் தமது குழுவினருடன் பல மாதங்கள் மதுரையில் தங்கி, தீவிர ஆய்வும் விசாரணையும் மேற்கொண்டு முறைகேடுகள் நடந்திருப்பதை உறுதி செய்தார். மொத்தம் ரூ.1.16 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. இத்தகைய சூழ்நிலையில், விசாரணைக் குழுவில் இடம்பெற் றிருந்த தாசில்தார் மீனாட்சி சுந்தரத்துக்கு 8 மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இதையடுத்து சகாயம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது அரசுத் தரப்பில் முன்னி லையான வழக்கறிஞர் ராஜ கோபால், விசாரணைக் குழுவுக் காக தமிழக அரசு சார்பில் மொத் தம் ரூ.58 லட்சம் செலவிடப்பட் டுள்ளது என்றும் தற்போது ரூ.5 லட்சம் கூடுதலாக சம்பளம் கேட்பதாகவும் தெரிவித்தார்.

கிரானைட் அதிபர்க ள் சங்கம் சார்பில் வாதாடிய வழக்க றிஞர், விசாரணை அறிக்கை தாக்கல் செய்ததுடன் சகாயம் குழுவி ன் பணி முடிந்துவிட்டது எனச் சுட்டிக்காட்டினார். “ஒரு லட்சத்து 16 ஆயி ரம் கோடி ரூபாய்க்கு கிரானைட் முறைகேடு நடந்திருப்பதாக குறிப் பிடப்பட்டிருப்பதில் உ ண்மை இல்லை,” என்றும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதே சகாயம் தமது வேதனையை வெளிப் படுத்தினார். “எனது விசாரணை அறிக் கையைச் சந்தேகிப்பது, எனது நேர்மையைச் சந்தேகிப்பதற்கு சமம்,” என்றார் சகாயம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon