கதிராமங்கலத்தில் நீடிக்கும் மக்கள் போராட்டம்

தஞ்சை: கதிராமங்கலம் பகுதி யில் நீடித்து வரும் போராட் டங்கள் காரணமாக அங்கு பதற்றம் நிலவுகிறது. அப்பகுதி மக்கள் ஐந்தா வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியை நிறுத்தவேண்டும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள ஒஎன்ஜிசி நிறுவனத்தாரை அங்கிருந்து வெளியேற்றவேண்டும் என் பதே கதிராமங்கலம் மக்களின் முக்கிய கோரிக்கை. இதற்காக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். முன்பு நடந்த போராட் டத்தின்போது கைதான 10 பேரை விடுவிக்கக் கோரியும் அய்யனார் கோவில் திடலில் கிராம மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்துகின்றனர்.