குமரியில் தினமும் 40 பேருக்கு டெங்கி பாதிப்பு: ஆட்சியர் தகவல்

குமரி: தமிழகம் முழுவதும் டெங்கி காய்ச்சல் பரவி வருவதாக நடிகர் கமல், எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறி வரும் நிலையில், கன்னியாகுமரியில் அக்காய்ச்சலால் தினந்தோறும் குறைந்தபட்சம் 40 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். இத்தகவலை அம்மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவ்வான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அம்மாவட்டத்தில் தினந்தோறும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிப்படுவதாகவும், அவர்களில் டெங்கி காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் டெங்கி காய்ச்சல் பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பு கூறி வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட இத்தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.