கனிமொழி: எதிர்க்கட்சிகள் ஒற்றுமை வலுக்கிறது

சென்னை: பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்திருந்த பல கட்சிகள் விலகி வருவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், மத்திய அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை வலுத்து வருவதாகத் தெரிவித்தார். "நாட்டில் பல அரசியல் கட்சி கள் தற்போது மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் எடுத்துள்ளன. தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராக யாரும் இல்லை.

"அந்தந்த பகுதிகளில் திட்டம் கொண்டு வரப்படும்போது மக்களிடம் பேசி, கருத்துகளைக் கேட்டறிய வேண்டும். ஆனால், தாங்கள் சொல்வதுதான் சட்டம் என்று கூறுபவர்களுக்குத் தாங் கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்று குறிப்பிடுவ தற்கு எந்தவித அருகதையும் இல்லை," என்றார் கனிமொழி. இத்தனை ஆண்டுகளாக சிறையில் இருந்தும் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளுக்கு விடுதலை தராதது வருந்தத்தக் கது என்று குறிப்பிட்ட அவர், சிறையில் இருந்த எத்தனையோ பேருக்கு இதற்கு முன் விடுதலை வழங்கப்பட்டுள்ள போதிலும், ஏழு பேருக்கு மட்டும் இதுவரை நியாயம் கிடைக்கவில்லை என் பது மிகுந்த வேதனை அளிப்ப தாகத் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!