ஏஎடிஎம்மில் எலிகள்: 12 லட்ச ரூபாய் நோட்டுகள் தூள் தூள்

ஏடிஎம் இயந்திரத்திற்குள் இருந்த 12 லட்சம் ரூபாய் நோட்டுகளை எலிகள் கடித்துக் குதறி துகள் களாக்கிய சம்பவம் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள டின் சுகியா மாவட்டத்தின் லாய்புலி என்னும் இடத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஏடிஎம் இயந்திரம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் மூடப் பட்டு இருந்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட இரு பது நாட்களுக்குப் பின்னர் இம் மாதம் 11ஆம் தேதி ஏடிஎம் இயந்திரத்தைப் பழுதுபார்க்கச் சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந் தனர். இயந்திரத்துக்குள் ரூபாய் நோட்டுகள் துகள்களாகக் குவிந்து கிடந்தன. அவை அத்தனையும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகள். கணக்குப் பார்த்ததில் 12 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அவ்வாறு பலநூறு துண்டுகளாகச் சிதைந்து கிடந்தன.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அறிமுகம் செய்யப்பட்ட 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகள் எலிகள் கடித்துக் குதறியதால் இப்படி தூள் தூளாகக் கிடந்தன. இது தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. படம்: இந்திய ஊடகம்

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!