‘வாக்கு இயந்திரத்தில் முறைகேடு என்று கூறிய சையது மீது வழக்கு’

புதுடெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) முறைகேடு செய்ய முடியும் என செயல்விளக்கம் அளித்த அமெரிக்க ‘ஹேக்கர்’ சையது சுஜா மீது டெல்லி காவல்துறையில் தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்­ளது. அதனையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இந்நிலையில் இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, சையது சுஜாவை 505வது பிரிவின் கீழ் விசாரிக்க நீதிமன்றத்தின் அனுமதி பெறுவது அவசியம்.
இந்த வழக்கை சைபர் நிபுணத்துவம் பெற்ற அமைப்பு விசாரிக்க வேண்டியுள்ளது. 
மேலும் மின்னணுத் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது,” என்றார்.