மகாத்மாவை கௌரவித்த மாபெரும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு

இந்தியாவின் 70வது குடியரசு தினக் கொண்டாட்டத்தின்போது இடம்பெற்ற அலங்கார ஊர்தி அணிவகுப்பு தேசத் தந்தை மகாத்மா காந்தியைக் கௌரவிப்பதாக இருந்தது. காந்தியின் 150வது பிறந்தநாள் ஆண்டு இது என்பதால் அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை 22 அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தின. அதில், தமிழகத்தின் அலங்கார ஊர்தி, காந்தி மேலாடையைத் துறந்ததற்கான காரணத்தை விளக்கியது. மதுரையில் விவசாயிகளைச் சந்தித்தபோது அவர்கள் மேலாடையின்றி இருந்ததைக் கண்ட பின் காந்தியும் மேலாடையை அணிவதைக் கைவிட்டார். படம்: இபிஏ