ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் திட்டம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: தற்போது சந்தை நிலவரம் சரியில்லாததால் ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந் நிறு வனத்தின் நிதி இயக்குநர் வினோத் ஹெஜாமாடி கூறியுள்ளார். ஆனால் ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிடவில்லை என்றார் அவர்.
இந்தியா விமானத் துறை மாநாட்டில் கலந்துகொண்ட அவர், சூழ்நிலை உகந்தபடி இல்லாததால் ஏர் இந்தியாவை தனியார்மயமாக் கும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள் ளது என்று குறிப்பிட்டார்.
“ஏர் இந்தியா ஊழியர்களி டையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது. எல்லாரும் அரசாங்க நிறுவனமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் அரசாங்க நிறுவனமாகத் தொடர்ந்து இருக்க முடியாது என்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர்,” என்று அவர் சொன்னார்.
ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கினால் 3,000 கோடி ரூபாயை சேமிக்க முடியும். இதன் மூலம் ஏர் இந்தியாவின் நிதி நிலை வலுப்படும் என்று திரு வினோத் ஹெஜாமாடி தெரி வித்தார்.
ஏர் இந்தியா நிறுவனத்தை முன்னேற்றுவதற்காக அண்மையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டார்.
ஆனால் இந்தியாவில் ஜெட்ஏர்வேஸ், இண்டிகோ போன்ற தனியார் நிறுவனங்கள் வெற்றிகரமாகச் செயல்படும்போது இந்தியாவின் அடையாளமாகிய ஏர் இந்தியாவால் ஏன் முடியவில்லை என்று அந்நிறுவனத்தின் மீது அக்கறை கொண்ட பயணிகளில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.