40 பேரைக் கொன்று குவித்த 22 வயது இளையர்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அடில் அகமது என்ற  22 வயதே ஆன இளைஞன் ஒருவன் தற்கொலைத் தாக்குதலை நடத்தி 40 பேரின் உயிரைப் பறித்துள்ளான். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரி வித்துள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல் வாமா மாவட்டத்தில்  உள்ள குந்திபாக் கிராமத்தில் 12ஆம் வகுப்பில் படித்து வந்த அடில்,  தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளான்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளில் நடந்துள்ள தாக்கு தல்களில் அடில் அகமது நடத்தியுள்ள இந்த தாக்குதலே மிக மோசமான, மிகப்பெரிய தாக்குதல்  என்று போலிஸ்துறை அறிக்கைகளும் அரசாங்க அதி காரிகளும் தெரிவித்துள்ளனர். 
வெடிகுண்டுகள்  நிரம்பி யிருந்த தனது காரை மத்திய போலிஸ் படையினருடன் வந்து கொண்டிருந்த பேருந்தின் மீது மோதி இந்த தற்கொலைப் படைத் தாக்குதலை அடில் அகமது நடத்தியுள்ளான். 
தாக்குதலில் ஒரேநாளில் 40 இந்திய ராணுவ வீரர்கள் உயி ரிழந்தனர். சில வீரர்களின் உடல்கள் சாலையில் சிதறிக் கிடந்தன. 

இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
புல்வாமா மாவட்டம், கண்டிபா பகுதியைச் சேர்ந்த அடில் அகமதுவின் வீட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில்தான் தாக்குதலை நடத்தி உள்ளான். 
இவனது தந்தையின் பெயர் ரியாஷ் அகமது. சிறிய கடை ஒன்றை அங்கு நடத்தி வருகிறார்.
பிளஸ் 2 படிப்பை பாதியிலேயே கைவிட்ட அடில், தனது வீட்டின் அருகே உள்ள மில் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளான். 

இவனது உறவினர் ஒருவர் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பாதுகாப்புப் படையினரால் சுட் டுக்கொல்லப்பட்டுள்ளார். இதன் பின்னர் அடிலுக்கும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட் டுள்ளது. 
அவர்களின் மூளைச் சல வைப்படி கடந்த ஆண்டு திடீ ரென காணாமல் போன அடில், பாகிஸ் தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக் கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றுள் ளான்.  இவன் அந்த அமைப்பில் ‘சி’ பிரிவைச் சேர்ந்த பயங்கர வாதியாக இருந்துள்ளான். 
தாக்குதலுக்கு முன்பு காணொளியில் பேசியுள்ள அடில், “என்னைப் போல் மேலும் பல இளை ஞர்கள் இதே வழியில் தாக்குதல் நடத்த தயாராக இருக்கின்றனர். 
“இதை நீங்கள் பார்க்கும்போது நான் சொர்க்கத்தில் இருப்பேன். ஓராண்டாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் பணியாற்றினேன். இது காஷ்மீர் மக்களுக்கு என் கடைசி செய்தி. இந்தியாவுக்கு எதிராக தெற்கு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர். அதில் வடக்கு காஷ்மீரைச் சேர்ந்தவர்களும் இணையவேண்டும். எங்கள் அமைப்பின் தலைவரை சமீபத்தில் கொன்றுள்ளனர். அதனால் நாங்கள் வலுவிழந்து விடுவோம் என நினைத்துள்ளனர். அது நடக்காது” என்று கூறியுள்ளான்.