பாகிஸ்தானுக்கு இந்தியா முதல் அடி: 200% தீர்வை

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரங்கேற்றப்பட்ட அதிபயங்கர புல்வாமா தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா முதல் அடியைக் கொடுத்து இருக்கிறது. அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் அனைத்துவகை பொருட்களுக்கும் உடனடியாக 200% தீர்வை விதிக்கப்படும் என்று புதுடெல்லி அறிவித்துவிட்டது. இந்தியாவிடம் பாகிஸ்தான் அனுபவித்து வந்த மிக அனுகூலமான நாடு என்ற நிலையையும் இஸ்லாமாபாத் இழந்துவிட் டது. தீர்வை 200% கூட்டப்பட்டு இருப்ப தால் இந்தியாவுக்கான பாகிஸ்தான் ஏற்று மதிகள் மிகவும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017-2018ல் இந்தியாவுக்கு US$488.5 மில்லியன் (ரூ. 3,482.3 கோடி) மதிப்புள்ள பொருட்களை பாகிஸ்தான் ஏற்றுமதி செய்தது.

பாகிஸ்தானில் இருந்து பழங்கள், சிமெண்ட், தோல், ரசாயன மற்றும் மசாலா சாமான்கள் இந்தியாவுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்போது இந்தியா தீர்வையைக் கூட்டி இருப்பதால் பாகிஸ்தானுக்கு ஆண்டுக்குச் சுமார் ரூ. 3,000 கோடிக்கும் அதிக இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்படுகிறது. பொருளியல் ரீதியில் பாகிஸ்தானுக்கு விழுந்து இருக்கும் இந்த முதல் அடி ஒருபுறம் இருக்க, அந்த நாட்டை அறவே ஒதுக்கிவைத்து நெருக்கடி கொடுக்கும்படி யும் கேட்டு உலக நாடுகளுடன் இந்தியா தொடர்புகொண்டு வருகிறது. இதோடு மட்டுமின்றி, உலக வங்கி, அனைத்துலக பண நிதியம், ஆசிய மேம் பாட்டு வங்கி, ஐரோப்பிய வங்கி ஆகிய வற்றிடமிருந்து கடன் வாங்க முடியாதபடி பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் இந்தியா முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கிறது.