அனில் அம்பானிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை: சிறையில் தள்ளுவோம்

புதுடெல்லி: இந்தியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான அனில் அம்பானி, நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு ஒன்றில் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
சுவீடன் நாட்டு நிறுவனமான எரிக்சன் தொடுத்த வழக்கில் ரூ.550 கோடியை அந்நிறுவனத் துக்கு வழங்க வேண்டும் என்று ரிலையன்ஸ் அம்பானிக்கு நீதி மன்றம் 120 நாட்கள் கால அவ காசம் வழங்கியிருந்தது.
ஆனால் இதை மீறியதால் நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு தொழில்நுட்பங் கள், கருவிகள், சேவைகளை அளிக்க 2014ல் அந்த நிறுவனத் துடன் எரிக்சன் நிறுவனம் ஏழு ஆண்டு ஒப்பந்தம் செய்தது.
இதன் தொடர்ச்சியாக எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.1,500 கோடியை ரிலையன்ஸ் நிறுவனம் தர வேண்டியிருந்தது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கெனவே ரூ.45,000 கோடி கடனில் இருப்பதால் உச்ச நீதிமன்ற அறி வுறுத்தலின்படி ரூ1,500 கோடியில் ரூ.550 கோடியை பெற்றுக்கொள்ள எரிக்சன் நிறுவனம் சம்மதித்தது.

இதையடுத்து எரிக்சன் நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் நிறு வனம் ரூ.550 கோடியை வழங்க 120 நாட்கள் அவகாசம் அளித்து கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 
அதன்படி கடந்த செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ரூ.550 கோடியை எரிக்சன் நிறுவனத் துக்கு ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
ஆனால் காலக்கெடு முடிந்த பிறகும் ரிலையன்ஸ் பணத்தை வழங்கவில்லை.
இதனால் ரிலையன்ஸ் நிறு வனத்தின் அதிபர் அனில் அம் பானி, மற்ற இரு அதிகாரிகள் மீது எரிக்சன் நிறுவனம், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற அவ மதிப்பு வழக்கில் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்கள் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.
நான்கு வார காலத்திற்குள் எரிக்சன் நிறுவனத்திற்கு ரூ.453 கோடியை ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, தவறினால் மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்க நேரிடும் என்று எச்சரித்தார்.