மம்தா கட்சி வேட்பாளர் பட்டியலில் 40 விழுக்காடு பெண்கள்

மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் அங்குள்ள 42 தொகுதிகளிலும் எந்தக் கட்சியுடனும் கைகோர்க்காமல் தனித்துப் போட்டியிடுகிறது.

அனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலைக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்டார்.

இந்தத் தேர்தலில் தமது கட்சி 40.5 விழுக்காடு பெண் வேட்பாளர்களை நிறுத்துகிறது என்றும் இது பெண்களுக்குப் பெருமைமிக்க தருணம் என்றும் அவர் கூறினார். 

இந்தத் தேர்தலில் சினிமா நட்சத்திரங்கள் நஸ்ரத் ஜஹான், மிமி சக்கரவர்த்தி போட்டியிடுகிறார்கள். 

“நாங்கள் எந்தக் கட்சியுடனும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்கவில்லை. ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்காகக் கதவுகள் திறந்தே இருக்கின்றன,” என்று திருவாட்டி மம்தா கூறியுள்ளார்.