மும்பையில் இடிந்து விழுந்த மேம்பாலம்:  அறுவர் மரணம், பலர் காயம்

மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஆறு பேர் மாண்டனர். ஏறத்தாழ 31 பேர் காயமுற்றனர்.
நேற்று முன்தினம் மாலை உச்சநேர வேளையின்போது மேம்பாலம் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இடிந்து விழுந்த மேம்பாலம் டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டடத்தை மும்பையின் முக்கிய சின்னங்களில் ஒன்றான சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் நிலையத்துடன் இணைக்கும் பாதையாக இருந்தது.
அந்தப் பாதையைத்தான் மும்பை தாக்குதலின்போது பயங்கரவாதி கசாப் பயன் படுத்தினான் என்பது குறிப் பிடத்தக்கது.
மேம்பாலம் இடிந்து விழுந் ததில் காயமுற்றவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படு வதாக இந்தியப் பேரிடர் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.