ஏப்ரல் முதல் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தம்

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கப்படாத நிலையில் அதன் விமானிகள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் வேலைநிறுத்தம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

மார்ச் 31ஆம் தேதிக்குள் தங்களது சம்பளம் தரப்படவேண்டும் என்று கோரிய ஊழியர்கள், அவ்வாறு செய்யப்படாவிடில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக கூறியுள்ளனர். 

இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் தனது விமானப் பயணங்கள் பலவற்றை ரத்து செய்துள்ளது.