வெற்றிக்காக நிதி, இலவசங்களை வாரி வழங்கும் ஆந்திர கட்சிகள்

நகரி: இந்தியத் தேர்தல் களத்தில் அனல் பறக்கும் பிரசாரங்கள் நடைபெற்று வரும் நிலையில் தேர் தல் வாக்குறுதிகளை அளிப்பதில் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுதோறும் 2 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும் என ஆந்திரா வின் தெலுங்கு தேசம் கட்சி அறிவித்துள்ளது.
அண்மைய தேர்தல்களில் வாக் காளர்களுக்கு இலவசங்களை அள்ளிக் கொடுக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இந் நிலையில் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கும் பட் சத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் நிதி அளிக்கப்படும் என அதன் தலைவர் ராகுல் அறிவித்தார்.
இதற்குப் பதிலடி தரும் வித மாக ஆண்டுதோறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவ ரும் ஆந்திர முதல்வருமான சந் திரபாபு நாயுடு இரு தினங்களுக்கு முன் அதிரடியாக அறிவித்தார்.
ஆனால், இவ்விரு தரப்பையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களையும் இலவசங்களையும் உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட் டுள்ளது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி.
இந்நிலையில் தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர் களிடம் பேசிய முதல்வர் சந்திர பாபு நாயுடு, விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.15 ஆயிரம் வரை நிதியளிக்கப்படும் என்றும் மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும் வெளிநாட்டில் படித் தால் ரூ.25 லட்சம் நிதியுதவியும், சுய உதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியும் வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே விவசாயிக ளுக்கு ஆண்டுதோறும் அதிகபட்ச மாக 1 லட்சம் ரூபாய் வரை நிதி யுதவி அளிக்கப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி யாக அறிவித்துள்ளார். வழக்கறி ஞர்களுக்கு ரூ.60 ஆயிரம் உதவித் தொகை, ரூ.100 கோடி யில் வழக்கறிஞர் நல நிதி உள் ளிட்ட திட்டங்களையும் அறிவித்த அவர், ஆந்திர அரசில் காலியாக உள்ள 2.3 லட்சம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என உறுதி அளித்துள்ளார்.
இவ்விரு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு அறிவித்துள்ள இத்திட்டங்களைச் செயல்படுத்த சுமார் ரூ.2 லட்சம் கோடி வரை தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!