வாய் திறவாதீர்: காங்கிரஸ் கட்சியினருக்கு அறிவுறுத்து

புதுடெல்லி: இன்னும் ஒரு மாத காலத்திற்கு கட்சியினர் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வி யதை அடுத்து கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார். இதையடுத்து, தலைவர் பதவிப் பிரச்சினை தீரும் வரை ஊடகங்களிடம் வாய் திறவாமல் இருக்க காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது.

“அடுத்த ஒரு மாதத்திற்கு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி களில் கட்சியின் செய்தித்தொடர்பாளர்களை அனுப்புவதில்லை என காங்கிரஸ் தீர்மானித்துள் ளது. அதனால், தொலைக்காட்சி ஊடகங்களும் அவற்றின் பொறுப்பாசிரியர்களும் தங்களது விவாத நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு இடமளிக்க வேண் டாம் எனக் கேட்டுக்கொள் ளப்படுகிறார்கள்,” என்று காங் கிரஸ் பேச்சாளர் ரந்தீப் சுர்ஜீவாலா டுவிட்டர் வழியாகத் தெரிவித்து இருக்கிறார்.

இதனிடையே, டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூடி, தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon