நண்பரைக் கொன்று அவரது மனைவியை மணக்க நினைத்தவர் கைது

தனது சொந்த நண்பரைக் கொன்று அவரது மனைவியைத் திருமணம் செய்ய நினைத்த ஆடவரை போலிசார் கைது செய்திருக்கிறார்கள். புதுடெல்லியைச் சேர்ந்த குல்கேஷ் என்பவர், தனது நண்பரைச் செங்கல்லால் அடித்து மயங்கச் செய்த பிறகு, மற்றொருவரின் துணைகொண்டு அந்த நண்பரின் உடலை ரயில் தடத்திற்குள் தூக்கி எறிந்ததாக  உள்ளூர் போலிசார் தெரிவித்தனர். பின்னர் அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த ரயில் அந்தச் சடலத்தைத் துண்டுதுண்டாக்கியது.

குல்கேஷ் பிறகு போலிசாரை அழைத்து தனக்கு தெரிந்த ஒருவரின் சடலத்தை ரயில் தடத்தில் கண்டதாகக் கூறினார். இது எப்படி நடந்தது என்பது பற்றி தனக்குத் தெரியாது என்று குல்கேஷ் பொய்யுரைத்தார்.

போலிசார் மேற்கொண்டு விசாரித்தபோது, மாண்ட ஆடவரின் மனைவியுடன் குல்கேஷ் கள்ள உறவு வைத்திருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அந்தப் பெண் குல்கேஷைவிட்டு விலகியதாகக் கூறப்படுகிறது. கோபத்தில் குல்கேஷ் தனது நண்பரைக் கொலை செய்ததாக அவரே ஒப்புக்கொண்டார் என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.