சிறைக்குள் மதுபான விருந்து

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சிறைச்சாலையில் கைதிகள் விருந்து வைத்து கும்மாளம் அடிக்கும் காணொளி பரவி வருகிறது. மதுபானம், அசைவ உணவு என தடபுடல் விருந்துடன் கைதிகள் உல்லாசமாக இருப்பதும் கைபேசிகளை தாராளமாகப் பயன்படுத்துவதும் அந்த காணொளியில் உள்ளன. இது குறித்து சிறை நிர்வாகத்தை ஊடகத்தினர் தொடர்பு கொண்டபோது எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை.  
இருப்பினும் இது குறித்து அதிகாரிகள் விசாரணையில் இறங்கி இருப்பதாக ஓர் இணையச் செய்தி குறிப்பிட்டது.