சுடச் சுடச் செய்திகள்

ஓராண்டுக்குள்  சந்திரயான்-3

புதுடெல்லி: நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா இப்போது சந்திரயான்-3 என்னும் விண்கலத்தை இந்த ஆண்டுக்குள் அனுப்பப் போவதாகக் கூறியுள்ளது.

நிலவில் உள்ள வளங்கள் குறித்து ஆய்வுசெய்வதற்காக இந்தியா முதலில் சந்திரயான்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கி அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து நிலவின் மற்ற வளங்கள் குறித்த ஆய்வு செய்ய இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-2 வை அனுப்பினர். உலகின் முதல் முயற்சி என மேலை நாடுகளால் வர்ணிக்கப்பட்ட அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.