சுடச் சுடச் செய்திகள்

விஸ்தாரா விமான ஊழியருக்கு ஆதரவாக பதிவிட்ட உயரதிகாரிக்கு பாராட்டு குவிகிறது

புதுடெல்லி: இந்திய விமான நிறுவனமான ‘விஸ்தாரா’வில் வேலை செய்யும் பெண் விமானப் பணியாளர் ஒருவர், பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள ஓய்விடத்தில் உறங்கிக் கொண்டி ருந்ததை விமர்சிக்கும் விதமாக அவரை நபர் ஒருவர் புகைப் படமெடுத்து டுவிட்டரில் பதி வேற்றம் செய்திருந்தார்.

இதில் சம்பந்தப்பட்ட தமது ஊழியருக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் அந்நிறுவனத்தின் தலைமை  வணிக அதிகாரி  சஞ்சிவ் கபூர் வெளிப்படுத்திய கருத்து இணையவாசிகளிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

“உங்களது பணியாளர் உங்களது நிறுவனத்துக்கு எதிர் மறையான தோற்றத்தை அளிக்கும் விதத்தில் நடந்துகொண்டுள்ளார். பெங்களூரு உள்நாட்டு விமான நிலைய ஓய்விடத்தில் செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 3) அன்று மாலை 4.25 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்தார்,” என்று குறிப் பிட்ட @AviationAnalyst என்ற டுவிட்டர் பயனாளர் விஸ்தாரா வணிக அதிகாரியை அந்தச் செய்தியில் பிணைத்திருந்தார்.

அதற்கு, “எங்களது பணி யாளர்களையோ அல்லது வாடிக் கையாளர்களையோ அவர்களது அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது, அதனை சமூக ஊடகங்களில் பதிவிடுவது போன்றவற்றை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்தத் துறையிலேயே மிகச் சிறந்த பணியாளர்கள் எங்கள் நிறுவனத்தின் பணியாளர்கள். அவர்களும் மனிதர்கள்தான். நீங்கள் பதிவேற்றிய படத்தை உடனடியாக அகற்றுவதே சரியான செயலாக இருக்கும்,” என்று        திரு சஞ்சிவ் கபூர் பதில் அளித்துள்ளார்.

திரு கபூரின் பதில் சமூக ஊடகப் பயனாளிகளிடையே மிகுந்த வரவேற்பு பெற்றதுடன் ஊழியர்களுக்கு ஆதரவாக இருப்பதே சரியான செயல் என்று அவரைப் பாராட்டி வருகின்ற   னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon