இந்திய அரசியல் குறித்து சுந்தர் பிச்சை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை

இந்திய அரசியல் குறித்து சுந்தர் பிச்சை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை

1 mins read
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்திய அரசியல் நிலவரம் குறித்து கூகள் நிறுவனத் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை பெயரில் சமூக வலைத்தளத்தில் வெளியான பதிவு பொய்யானது என்பது தெரியவந்துள்ளது. சுந்தர் பிச்சை புகைப்படத்துடன் அப்பதிவு வெளியாகியுள்ளது. இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பல லட்சம் இளையர்கள் வேலை இழப்பது தமக்குக் கவலை அளிக்கிறது என்று சுந்தர் பிச்சை குறிப்பிட்டதாக அந்தப் பதிவு தெரிவிக்கிறது. மக்களின் உணவு விஷயத்தைக் கைவிட்டு, அவர்கள் நலன் மீது அரசு கவனம் செலுத்தவேண்டும் என்றும் அப்பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளது. சுந்தர் பிச்சை பெயரில் வெளியான பதிவு என்பதால் சமூக வலைத்தளங்களில் இது வேகமாகப் பரவியது. இந்நிலையில் அந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள கருத்துகளை சுந்தர் பிச்சை கூறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்தப் போலிப் பதிவு கடந்த 2017ஆம் ஆண்டிலேயே பலரால் பகிரப்பட்டதும் தெரியவந்துள்ளது.