நாய்களைப்போல கருதி சுட்டோம்: பாஜக தலைவர் பேச்சால் அதிர்ச்சி

கோல்கத்தா: பாஜக ஆளும் மாநிலங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் போராடியவர்களை நாய்களைப் போல நினைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் பேசியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தில்  குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்புப் போராட்டங்களின் போது ரயில்வே மற்றும் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியோர் மீது தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தாதற்காக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாகச் சாடினார் கோஷ்.

“உத்தரப் பிரதேசம், அசாம், கர்நாடக மாநிலங்களில் எங்களது பாஜக அரசு, அவர்களை நாயைப் போலச் சுட்டுத் தள்ளியது. முஸ்லிம் வாக்குகள் பறிபோய்விடும் என அஞ்சி, மம்தாவின் போலிஸ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது,” என்றார் அவர்.