14 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தையின் எடை 5.9 கிலோ

பெங்களூரு: பெங்களூரு வாணிவிலாஸ் அரசு மருத்துவமனையில் 5.9 கிலோ கிராம் எடையுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. டார்ஜிலிங்கைப் பூர்விகமாகக் கொண்ட யோகேஷ், சரஸ்வதி தம்பதியினருக்கு இந்த குழந்தை பிறந்துள்ளது. கர்ப்ப காலத்தின் போது சரஸ்வதி 80 கிலோ எடையுடன் இருந்ததால் சரஸ்வதி இரட்டைக் குழந்தையைச் சுமப்பதாக மருத்துவர்கள் கருதி இருந்த வேளையில் கடந்த சனிக்கிழமை அதிக எடையுடன் இந்தக் குழந்தை பிறந்தது. இந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை பிறந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு அறுவை சிகிச்சை மூலம் இந்த குழந்தை பிறந்துள்ளது.