டெல்லியில் போலிஸ் குவிப்பு; வன்முறை தணிந்தது; பலியானோர் எண்ணிக்கை 23 ஆனது

புதுடெல்லி: டெல்லியில் வெடித்துள்ள கலவரம் தொடர்பில் கோபத்தில் கொந்தளிக்காமல் அமைதியை நிலைநாட்டும்படி டெல்லி மக்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

வடகிழக்கு டெல்லியில் குடி யுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்புத் தெரிவித்தும் நடைபெற்ற இருவேறு பேரணிகளின்போது இந்த இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை மூண்டது.

கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்த வன்முறையில் நேற்றுடன் உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

பதற்றம் அதிகரித்ததால் மத்திய, வடகிழக்கு டெல்லியில் மார்ச் மாதம் 24ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி மக்கள் அனைவரையும் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பதிவில், “டெல்லி மக்கள் அனை வரும் அனைத்து நேரங்களிலும் அமைதியையும் சகோதரத்துவத்தை யும் பேணவேண்டும்.

“அமைதி, ஒற்றுமையே நமது பண்பாட்டின் அடையாளங்கள். டெல்லியில் அமைதியை நிலைநாட்ட எனது சகோதரிகள், சகோதரர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

“டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நிலைமை குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட்டது. அமைதியையும் இயல்புநிலையையும் உறுதிப்படுத்த காவல்துறையும் பிற பாதுகாப்பு அமைப்புகளும் துரிதமாக செயல்பட்டு வருகின்றன.

“டெல்லியில் விரைவில் அமைதி, இயல்பு நிலை திரும்புவது முக்கியம்,” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, டெல்லியில் போராட்டக்காரர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை நேற்று சற்று தணிந்ததாகக் கூறப்பட்ட நிலையில், மூடப்பட்ட மெட்ரோ ரயில் நிலை யங்களும் திறக்கப்பட்டு வழக்க மான சேவைகள் தொடங்கின.

மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று காலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “டெல்லியில் நிலைமை மிகவும் மோசமாக போய்க்கொண்டிருக்கிறது. காவல்துறை எத்தனையோ முயற்சி கள் எடுத்தும்கூட நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்க முடிய வில்லை.

எனவே பாதிக்கப்பட்ட பிற பகுதிகளிலும் ஊரடங்கு உத்த ரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ராணுவம் வரவழைக்கப்படவேண்டும். இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள் ளேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!