பொருளியலுக்கு உரமிட வங்கி 4 அம்சத் திட்டம்

புது­டெல்லி: கொரோனா கிருமித்­தொற்று கார­ண­மாக ஏற்படக்கூடிய இந்­தி­யப் பொரு­ளி­யல் பாதிப்பைக் குறைக்க நாட்­டின் மத்­திய வங்­கி­யான ரிசர்வ் வங்கி தடா­லடி­யாக நான்கு அம்ச திட்­டத்தை அறி­வித்து உள்­ளது.

போது­மான நிதி சந்­தை­யில் இருப்­பதை உறுதி செய்­வது, வங்­கி­கள் தாரா­ள­மாக கடன் வழங்க ஏற்­பாடு, கட­னைத் திருப்பிச் செலுத்­து­வ­தில் உள்ள நெருக்­க­டியைக் குறைப்­பது, சந்­தை­யில் ஏற்­படும் ஏற்­றத்­தாழ்­வு­க­ளைக் குறைக்க நட­வ­டிக்கை ஆகி­யவை அந்த முக்­கிய நான்கு அம்­சங்­கள் என்று மத்­திய வங்­கி­யின் ஆளு­நர் சக்­தி­காந்த் தாஸ் செய்­தி­யா­ளர்­கள் மாநாட்­டில் தெரி­வித்­தார்.

ரிசர்வ் வங்­கி­யின் பொரு­ளி­யல் ஊக்கு­விப்புச் செயல் திட்­டத்­தின்­ப­டி, வங்­கி­களுக்­கான குறு­கிய கால கடன் வட்டி விகி­தம் (ரெப்போ) 5.5%லிருந்து 4.4% ஆகக் குறைக்­கப்­ப­டு­கிறது.

இத­னால் வீட்­டுக்­க­டன் வட்டி குறைய வாய்ப்­புள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. வங்­கி­கள் கொடுத்த கடன் வசூலிப்பை 3 மாதம் நிறுத்­தி­வைக்க ரிசர்வ் வங்கி உத்­த­ர­விட்டது.

வங்கி வைப்­புத் தொகை­க­ளுக்­கும் ரிசர்வ் வங்கி அளிக்­கும் வட்டி விகி­தம் 4% ஆகக் குறைக்­கப்­பட்டு உள்­ளது. வங்கி­கள் கடன் வழங்­கு­வதை அதி­க­ரிக்­கவே இந்த நட­வ­டிக்கை இடம்­பெ­று­வ­தாக மத்­திய வங்­கி­ ஆளு­நர் குறிப்­பிட்­டார்.

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக ஏற்­பட்­டு­வ­ரும் பாதிப்பு கணி­ச­மாக இருக்­கும் என்று தெரி­வித்த சக்­தி­காந்த் தாஸ், பொருட்­க­ளுக்­கான தேவை பெரி­தும் குறைந்­துள்­ள­தா­க­வும் கச்சா எண்­ணெய் விலை குறைந்­தி­ருப்­பது பண­வீக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் உத­வி­க­ர­மாக இருக்­கும் என்­றும் தெரி­வித்­தார்.

நாட்­டில் விளைச்­சல் அமோ­க­மாக உள்ள­தால் வரும் நாட்­களில் உண­வுப் பொருட்­களின் விலை குறை­யும் என்று கணிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் நிதி நிலை­யில் உறு­திப்­பாட்டை பரா­ம­ரிப்­பதே பெரும் சவா­லாக உள்­ளது என்­றும் அவர் கூறி­னார்.

நாடு முழு­வ­தி­லும் 21 நாள் ஊரடங்கு அம­லில் உள்­ளது. பொது­மக்­கள் முதல் கூலித் தொழி­லா­ளர்­கள், தனி­யார் துறை ஊழி­யர்­கள் என பல தரப்­பி­ன­ரும் வீடு­களுக்­குள் முடங்­கி­விட்­ட­னர்.

அனைத்து தொழில் துறை­களும் நிலை­குத்­தி­விட்­டன. மக்­க­ளின் வாழ்­வா­தா­ரம் பெரி­தும் பாதிக்­கப்­பட்டு உள்­ளது.

இத­னால் மத்­திய, மாநில அர­சு­கள் பல்­வேறு நிதி சலு­கை­களை அளித்து வரு­கின்­றன. ஏழை­கள், பெண்­கள், முதியோா், தொழி­லா­ளா்­கள் உள்­ளிட்­டோ­ருக்கு உத­வும் வகை­யில் ரூ.1.70 லட்­சம் கோடி மதிப்­பி­லான சலு­கைத் திட்­டங்­களை மத்­திய அரசு வியா­ழக்­கி­ழமை அறி­வித்­தது.

இந்­நி­லை­யில், ரிசர்வ் வங்கி 4 அம்ச ஊக்­கு­விப்பு திட்­டத்தை அறி­வித்து, வங்­கி­களில் பணம் போட்டு வைத்திருப்பவர்­களின் பணத்­திற்கு முழு பொறுப்பு வழங்­கப்­படும் என்­றும் உறுதி அளித்­துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!