தனிமையை உறுதிசெய்ய மணிக்கு ஒரு செல்ஃபி

பெங்­க­ளூரு: கொரோனா கிருமி கார­ண­மாக வீடு­களில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களை கண்­காணிக்க கர்­நா­டக மாநி­லம் கைபேசி செயலி ஒன்றை அறி­மு­கம் செய்­துள்­ளது. 14 நாட்­கள் தனி­மைப்­ப­டுத்­தல் உத்­த­ரவை ஏரா­ள­மா­னோர் மீறு­வ­தாக வந்த புகார்­க­ளைத் தொடர்ந்து ‘Quarantine Watch’ என்­னும் செயலி உரு­வாக்­கப்­பட்டுள்­ளது.

தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­கள் இச்­செ­ய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்து காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மணிக்கு ஒரு தடவை செல்ஃபி படம் எடுத்து அர­சாங்க மருத்­துவ கண்­கா­ணிப்பு அமைப்­புக்கு அனுப்பி வைக்க வேண்­டும்.

அதி­கா­ரி­கள் அந்­தப் படத்தை ஜிபி­எஸ் தொழில்­நுட்­பத்­தைப் பயன் படுத்தி சரி­யான இடத்­தில் இருந்து தான் படம் வந்­துள்­ளதா என சோதிப்­பர். சந்­தே­கம் ஏற்­பட்­டால் அதி­கா­ரி­கள் விரைந்து சென்று விசா­ரணை நடத்­து­வர். வெளி­யி­லி­ருந்து எடுக்­கப்­பட்ட படம் என தெரிய வந்­தால் அதனை அனுப்­பி­ய­வர் அர­சாங்­கத்­தின் கட்­டுப்­பாட்­டில் உள்ள தனி­மைப் பகு­தி­களில் அடைக்­கப்­ப­டு­வார்.

கர்­நா­டக மாநில மருத்­துவ கல்வி அமைச்­சர் டாக்­டர் கே சுதா­கர் இதனை விளக்­கி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!