ஊரடங்கு காலத்திலும் தினமும் 200 பேருக்கு கிருமித்தொற்று

புது­டெல்லி: இந்­தி­யா­வில் திங்­கட்­கி­ழமை கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­வர்­க­ளைக் காட்­டி­லும் நேற்று முன்­தி­னம் இரண்டு மடங்கு பாதிப்பு அதி­ க­ரித்­துள்­ளது. குறிப்­பாக மகா­ராஷ்­டி­ரா­வில் 82, தமிழ்­நாட்­டில் 57 பேர் ஒரே­நா­ளில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் அதிக பட்­ச­மாக 320 பேர் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர். அதைத் தொடர்ந்து கேர­ளா­வில் 241 பேர், தமி­ழ­கத்­தில் 124 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. இதன்­மூ­லம் இந்­தி­யா­வில் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை 1,637ஆக அதி­க­ரித்­துள்­ளது.

கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்­கை­யும் 52 ஆகி விட்டது. நேற்று முன்­தி­னம் மட்­டும் 9 பேர் மாண்­ட­னர். ஞாயிறு, திங்­கள், செவ்­வாய் ஆகிய மூன்று நாட்­களில் புதி­தாக 626 பேருக்கு கொரோனா கிருமி பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. அதா­வது, சரா­ச­ரி­யாக நாள் ஒன்­றுக்கு 200 பேருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. 21 நாள் ஊர­டங்கு நடப்­பில் இருக்­கும் நிலை­யி­லும் கிரு­மித் தொற்று அதி­க­ரிப்­ப­தற்கு பொது மக்­க­ளின் அலட்­சி­யமே முக்­கிய கார­ணம் என அர­சுத்­த­ரப்­பில் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

இந்­நி­லை­யில், நோய்த்­தொற்று தடுப்­பில் பொது­மக்­க­ளின் ஒத்­து­ழைப்பு குறை­வாக உள்­ளது என்று மத்­திய சுகா­தா­ரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் தெரிவித்­தார். இது­தொ­டா்­பாக, அவா் செய்­தி­யா­ளா்­க­ளி­டம் கூறு­கை­யில், “நாட்­டில் கொவிட்டி-19 கிரு­மித்­தொற்று பர­வும் அபா­ய­முள்ள இடங்­க­ளின் எண்­ணிக்கை திடீ­ரென அதி­க­ரித்து வரு­கின்­றன. இதற்கு, பொது­மக்­க­ளின் ஒத்­து­ழைப்பு குறை­வாக உள்­ள­தும் அலட்­சி­யப்­போக்­கும் முக்­கிய கார­ணங்­க­ளா­கும். கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போரில் மக்­க­ளின் ஒருங்­கி­ணைந்த ஆத­ரவு அவ­சி­யம். “கிருமிப் பர­வலை தடுப்­ப­தில் சமூக இடை­வெ­ளியை பின்­பற்­று­வது முக்­கி­ய­மா­னது. அனை­வ­ருமே முகக்­க­வ­சம் அணிய வேண்­டும் என்ற அவ­சி­யம் கிடை­யாது. “மருத்­து­வப் பணி­யா­ளா்­க­ளுக்­கான பாது­காப்பு உப­க­ர­ணங்­கள், என்-95 முகக்­க­வ­சங்­கள், சுவா­சக் கரு­வி­கள் உள்­ளிட்­டவை போதிய அள­வில் கிடைப்­பதற்குத் தேவை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளன,” என்­றார் அந்த அதிகாரி.