டெல்லி கூட்டத்தில் பங்கேற்ற 960 வெளிநாட்டவர் விசா ரத்தானது; நடவடிக்கை எடுக்க உத்தரவு

புது­டெல்லி: புது­டெல்­லி­யில் நடந்த தப்­லீக் ஜமாத் கூட்­டத்­தில் பங்­கேற்ற 960 வெளி­நாட்­ட­வர்­க­ளின் விசாவை மத்­திய உள்­துறை அமைச்சு ரத்துசெய்­து­விட்­டது.

அந்­தக் கூட்­டத்­தில் பல்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்த 1,300 வெளி­நாட்­ட­வர் பங்­கேற்­ற­னர். அவர்­களில் 960 பேர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். சுற்­றுலா விசா­வைப் பெற்று அதன் அடிப்­ப­டை­யில் இந்­தி­யா­வுக்கு வந்து புது­டெல்லி கூட்­டத்­தில் பங்­கேற்­ற­தால் அவர்­கள் விசா விதி­மு­றை­களை மீறி இருக்­கி­றார்­கள் என்று குற்­றம்­சாட்­டப்­பட்­டது.

இதை­ய­டுத்து அவர்­கள் கறுப்புப் பட்­டி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­க­ளின் விசா­வும் ரத்து செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் சட்­ட­ரீ­தி­யாக நட­வ­டிக்கை எடுக்க உத்தர விடப்பட்டுள்ளதாகவும் மத்­திய உள்­துறை அமைச்­சு செய்தியாளர் டுவிட்­ட­ரில் தெரி­வித்­துள்­ளார்.

இவ்­வே­ளை­யில், அந்த மாநாட்­டை­யொட்டி நாடு முழு­வ­தி­லும் மொத்­தம் 9,000 பேர் தனி­மைப்­படுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­களில் மாநாட்­டில் கலந்­து­கொண்ட வெளி­நாட்­ட­வர்­களும் மற்­ற­வர்­களும் அவர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­களும் அடங்­கு­வர் என்­றும் உள்­துறை அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

மாநாட்­டில் கலந்துகொண்டு திரும்­பி­யோரை அடையாளம் காணும் பணி தீவி­ர­மாக நாடு முழு­வ­தி­லும் நடப்­ப­தா­க­வு­ம் அது தெரி­வித்­தது.

இத­னி­டையே, தப்­லீக் ஜமாத் நிர்­வா­கி­கள் 7 பேர் மீது பதி­வான வழக்­கு­கள் தொடர்­பான விசாரணை­ தீவி­ரம் அடைந்­துள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் குறிப்­பிட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!