சுடச் சுடச் செய்திகள்

அமைச்சர்: ஆகஸ்ட்டுக்கு முன் அனைத்துலக விமானச் சேவை

புது­டெல்லி: இந்­திய அர­சாங்­கம் வரும் ஆகஸ்ட்­டுக்கு முன் கணி­சமான அள­வுக்கு அனைத்­து­லக விமா­னச் சேவை­யைத் தொடங்க முய­லும் என்று விமா­னப் போக்­கு­வரத்­துத் துறை அமைச்­சர் ஹர்­திப் சிங் புரி நேற்று தெரி­வித்­தார்.

உள்­நாட்டு விமா­னச் சேவை மே 25 முதல் தொடங்­கும் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது. ஆனால் நாட்­டில் மே 31 வரை ஊர­டங்கு விதிக்­கப்­பட்டு இருக்­கிறது. இதை எல்­லா­ரும் தெளி­வா­கத் தெரிந்­து­கொள்ள வேண்­டும் என்று அமைச்­சர் வலி­யு­றுத்­தி­னார்.

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக பல நாடு­க­ளி­லும் சிக்கி இருக்­கும் இந்­தி­யர்­களைத் தாய­கம் கொண்டு வரு­வ­தற்­காக மத்­திய அரசு சிறப்­புத் திட்­டத்தை நடப்­புக்­குக் கொண்டு வந்­துள்­ளது.

அந்­தத் திட்­டம் தொடங்­கப்­பட்டு முதல் 25 நாட்­களில் சிறப்பு விமா­னங்­கள் மூலம் ஏறக்­கு­றைய 50,000 இந்­தி­யர்­கள் பல நாடு­களில் இருந்து தாய­கம் கொண்டு வரப்­படு­வார்­கள் என்றார் அமைச்­சர்.

அந்­தத் திட்­டம் மே 7ஆம் தேதி தொடங்­கப்­பட்­டது. கடந்த வியா­ழக்­கி­ழமை வரை மொத்­தம் 23,475 இந்­தி­யர்­கள் பல நாடு­களில் இருந்தும் இந்­தி­யா­வுக்குக் கொண்டு வரப்­பட்­ட­னர்.

அத்­திட்­டத்­தின் இரண்­டா­வது கட்­டம் மே 22ஆம் தேதி­யு­டன் முடிந்­தது. அடுத்த கட்­டம் ஜூன் 13 வரை தொடரும் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

மூன்­றா­வது கட்­டத்­தில் ஜெர்­மனி­யின் பிராங்­ஃபர்ட் நகரை மைய­மாக வைத்து இந்திய நாட்டவர்களுக்காகச் சிறப்பு விமா­னச் சேவை­கள் இயக்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon