கொரோனா பிடியில் இந்தியா: மரணமும் கூடும் என அச்சம்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் நாளும் ஒரு சாத­னை­யாக கொரோனா கிரு­மித்­தொற்று தாறு­மா­றா­கக் கூடி வரு­கிறது.

அந்த நாட்­டில் கிரு­மித்­தொற்று கார­ண­மாக ஏற்­படும் மர­ணங்­கள் இது­வ­ரை­யில் குறை­வா­கத்­தான் உள்ளன என்­றா­லும் இனி­மேல் கொவிட்-19க்குப் பலி­யா­வோர் எண்­ணிக்கை கிடு­கி­டு­வென அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று வல்­லு­நர்­கள் எச்­ச­ரித்து இருக்­கி­றார்­கள்.

இந்த நிலை­யில், பிர­த­மர் நரேந்­திர மோடி, நீண்ட நெடும் கிருமி எதிர்ப்­புப் போராட்­டத்தை நாடு எதிர்­நோக்கி இருக்­கிறது என்று மக்­க­ளுக்கு எழு­திய ஒரு கடி­தத்­தில் குறிப்­பிட்டு இருக்­கி­றார்.

இந்­திய மக்­கள் அனை­வ­ரும் கட்­டுப்­பாட்டு விதி­க­ளைக் கடு­மை­யாகக் கடைப்­பி­டித்­தா­லொ­ழிய கிரு­மி­யைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது என்று குறிப்­பிட்டு உள்ள பிரதமர், இந்­தப் போராட்­டத்­தில் முழு ஒத்­து­ழைப்­பைத் தரும்­படி மக்­க­ளுக்கு வேண்­டு­கோள் விடுத்துள்ளார்.

கொரோனா கிரு­மிப் பர­வ­லைத் தடுப்­ப­தற்­காக இந்­தி­யா­வில் நான்கு கட்­டங்­க­ளாக நடப்­புக்கு வந்­துள்ள கட்­டுப்­பா­டு­கள் இன்­று­டன் முடி­வ­டை­கின்­றன. இந்­நி­லை­யில், இது­வரை இல்­லாத அள­வுக்கு சனிக்­கி­ழமை காலை 8 மணி நில­வ­ரப்­படி மொத்­தம் 173,763 பேரைக் கிருமி தொற்­றி­விட்­ட­தாக அதி­கா­ர­பூர்வ தக­வல்­கள் தெரி­வித்­தன.

மொத்­தம் 4,971 பேர் பலி­யா­கி­விட்­டார்­கள். இதன் கார­ண­மாக கட்­டுப்­பா­டு­கள் மேலும் நீட்­டிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இத­னி­டையே, இந்­தி­யா­வி­லேயே கொரோனா கிரு­மித்­தொற்று அதி­கம் உள்ள மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தின் தலை­ந­க­ரான மும்­பை­யில் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத அள­வுக்கு தொற்று பர­வு­வ­தா­கத் தெரி­கிறது.

மும்­பை­யில் பல மருத்­து­வ­மனை வார்­டு­களில் இறந்­த­வர்­க­ளைப் பெற உற­வி­னர்­கள் அஞ்­சு­வ­தால் உடல்­கள் அப்­ப­டியே கிடப்­ப­தா­க­வும் படுக்­கை­கள் இல்­லா­த­தால் தரையிலேயே படுத்­துக்­கி­டக்­கும்­படி நோயாளி­க­ளி­டம் கூறப்­ப­டு­வ­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வச­தி­கள் அனைத்­தும் கொரோனா நோயா­ளி­கள் பக்­கம் திரும்பி இருப்­ப­தால் மருத்­துவ சிகிச்சை கிடைக்­கா­மல் இதர நோயா­ளி­களில் சிலர் மாண்டு­விட்­ட­தா­க­வும் தெரி­கிறது.

நாள்­தோ­றும் புதுப்­புது வார்­டு­கள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன என்­றா­லும் ஒரே நாளில் அவை எல்­லாம் நிரம்­பி­வி­டு­கின்­றன என்று மத்­திய மும்­பை­யில் உள்ள கிங் எட்­வர்ட் மருத்­து­வ­மனை மருத்­து­வர் சையது அகம்­மது கூறு­கி­றார்.

மும்­பை­யைப் பொறுத்­த­வரை சுகா­தார வளங்­கள் அறவே போத­வில்லை என்று சம்­பந்­தப்­பட்ட தரப்புகள் எச்சரிக்கை சங்கை ஊதி இருக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!