விகாஸ் துபே சொத்துகள்: முடக்கும் அமலாக்கத்துறை

லக்னோ: அண்­மை­யில் உத்­த­ரப்­பி­ர­தேச போலி­சா­ரால் என்­க­வுன்­ட­ரில் சுட்­டுக் கொல்­லப்­பட்ட பிர­பல ரவுடி விகாஸ் துபே­யின் பல கோடி ரூபாய் மதிப்­பி­லான சொத்­து­க­ளைப் பறி­மு­தல் செய்ய மத்­திய அம­லாக்­கத்­துறை நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

இது ­தொ­டர்­பாக உத்­த­ரப்­பி­ர­தேச காவல்­து­றைக்கு நோட்­டீஸ் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

விகாஸ் துபே மிகக் குறு­கிய காலத்­தில் கோடீஸ்­வ­ரர் ஆகி­யுள்­ளார் என்­றும் 14 முறை மேற்­கொண்ட வெளி­நாட்­டுப் பய­ணங்­கள் மூலம் ஹவாலா முறை­யில் அவர் பணம் சேர்த்­துள்­ள­தா­க­வும் அந்த நோட்­டீ­ஸில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

லக்­னோ­வில் 23 கோடி ரூபாய் மதிப்­பில் சொகுசு பங்­களா ஒன்றை விகாஸ் வாங்­கி­யுள்­ளார். அந்­ந­க­ரில் மட்­டும் 16 அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பு வீடு­களும் 11 பங்­க­ளாக்­களும் உள்­ளன. ஐக்­கிய அரபு நாடுக­ளி­லும் தாய்­லாந்­தி­லும் சொத்­துகள் சேர்த்­துள்­ளார் என்று அம­லாக்­கத்­துறை நோட்­டீ­ஸில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக இந்­திய ஊட­கம் தெரி­வித்­துள்­ளது.

விகாஸ் இறு­திச் சடங்­கில் அவ­ரது பெற்­றோர் இரு­வ­ரும் பங்­கேற்­க­வில்லை. இதற்கு தங்­கள் மகன் செய்த குற்­றச்­செ­யல்­களே கார­ணம் என இரு­வ­ரும் தெரி­வித்­துள்­ள­னர்.