ஐந்து ரஃபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி: பிரான்­சி­டம் இருந்து இந்­தியா ரஃபேல் விமா­னங்­களை வாங்­கி­யுள்­ளது. முதற்கட்­ட­மாக ஐந்து விமா­னங்­கள் பிரான்­சில் இருந்து இந்­தியா நோக்­கிப் புறப்­பட்­டுள்­ளன.

இந்­திய விமா­னப்­ப­டையை நவீ­னப்­ப­டுத்­தும் வகை­யில் ரஃபேல் போர் விமா­னங்­களை வாங்க பல ஆண்­டு­க­ளாக பேச்சுவார்த்தை நடந்­தது. இதன் அடிப்­ப­டை­யில் இந்­தி­யா­வுக்­கும் பிரான்­சுக்­கும் ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­கி­யது.

முதற்கட்­ட­மாக ஐந்து ரஃபேல் போர் விமா­னங்­கள் இந்­தி­யா­விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்­திய விமா­னப்­படை விமா­னி­கள் பிரான்ஸ் சென்று விமானங்களைக் கொண்டு வரு­கின்­ற­னர். பிரான்­சில் இருந்து நேற்று புறப்­பட்ட விமா­னங்­களை பிரான்­சுக்­கான இந்­தி­யத் தூதர் வழி­ய­னுப்பி வைத்­தார்.

அங்கிருந்து புறப்­பட்ட விமா­னங்­கள் ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­களில் உள்ள அல்­தர்ஸா விமா­னப்­படை தளத்­தில் தரை­யி­றக்­கப்­படும். அங்கு செல்­லும் வரை தேவை­யான எரி­பொ­ருளை பிரான்ஸ் விமா­னப்­

ப­டை­யின் எரி­பொ­ருள் டேங்க் விமா­னம் வழங்­கும். ஐக்­கிய அரபு சிற்­ ற­ர­சு­களில் ஓய்­வுக்­குப் பிறகு எரி­பொ­ருள் நிரப்­பப்­பட்டு நாளை (ஜூலை 29) பஞ்­சாப் மாநி­லம் அம்­பாலா விமா­னப்­படை தளத்தை வந்து சேரும். அதன் பின்­னர் இந்­திய விமா­னப் படை­யில் அவை முறைப்­படி சேர்ப்­ப­தற்­கான நடை­மு­றை­கள் தொடங்­கும்

முன்­ன­தாக இந்­திய விமா­னப்­படை வீரர்­கள் 12 பேருக்கு ரஃபேல் போர் விமா­னங்­களை இயக்­கு­வது தொடர்­பான பயிற்­சியை பிரான்ஸ் வழங்­கி­யி­ருந்­தது. அவர்­கள்­தான் தற்­போது விமா­னத்தை பிரான்­ஸி­லி­ருந்து இந்­தி­யா­வுக்கு எடுத்து வரு­கின்­ற­னர்.

கடந்த 2016 செப்­டம்­பர் மாதத்­தில் ரூ.58 ஆயி­ரம் கோடி செல­வில் 36 ரஃபேல் போர் விமா­னங்­களை வாங்­கு­வது தொடர்­பாக இந்­தியா- பிரான்சு அர­சு­க­ளுக்கு இடையே ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. கடந்த ஆண்டு அக்­டோ­பர் 8ஆம் தேதி, முத­லா­வது ரஃபேல் விமா­னத்தை தற்­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங் பிரான்சி­டம் இருந்து பெற்­றுக்­கொண்­டார். 36 ஜெட் விமா­னங்­களில் 30 போர் விமா­னங்­கள். எஞ்­சிய 6 பயிற்சி விமா­னங்­கள்.

எல்­லை­யில் சீனா அத்­து­மீறி வரும் நிலை­யில் அதனை எதிர்ப்­ப­தற்கு தகு­தி­யான ஆயு­தங்­களில் ஒன்­றாக ரஃபேல் போர் விமா­னங்­கள் கருதப்­ப­டு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!