33 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வில் வெற்றி

ஹைத­ரா­பாத்: கொரோனா புண்ணி­யத்­தில் 51 வயது ஆட­வர் 33 ஆண்டு­க­ளுக்­குப் பிறகு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்­வில் தேர்ச்சி பெற்­றுள்­ளார்.

ஹைத­ரா­பாத்­தைச் சேர்ந்த நூருதீன் கடந்த 1987ஆம் ஆண்டு முதன்­மு­த­லாக பத்­தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழு­தி­னார். அப்­போது அவ­ரால் ஆங்­கி­லத்­தில் தேர்ச்சி பெற முடி­ய­வில்லை.

அதன் பின்­னர் ஒவ்­வோர் ஆண்டும் தவ­றா­மல் தேர்­வு எழுதி வந்­த­போ­தி­லும் தேர்ச்சி பெறத் தேவை­யான 35 மதிப்­பெண்­களை அவ­ரால் எடுக்க முடி­ய­வில்லை.

இந்தாண்டு அனைத்துப் பாடங்களையும் எழுத வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் கூறியதை அடுத்து தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியிருந்தார் நூருதீன்.

தேர்வு எழுத காத்திருந்த வேளையில் கொரோனா விவகாரத்தால் தெலுங்கானாவில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம் நூருதீன் 33 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வெழுதாமலேயே 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.