பாடகர் எஸ்.பி.பாலா, எம்எல்ஏ கருணாசுக்கு கிருமித்தொற்று

சென்னை: பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தமக்கு கிருமி தொற்றியதை உறுதி செய்துள்ளார்.

அண்மையில் கிருமித் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார் எஸ்.பி.பி. அதன் முடிவில் கிருமி தொற்றியது உறுதியானது. இதையடுத்து சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே திரைப்பட நடிகரும் எம்எல்ஏவுமான கருணாசுக்கும் கொவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதியானது. முன்னதாக அவரது பாதுகாவலருக்கு கிருமிதொற்றியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பூம்புகார் தொகுதி அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon