'சீனப்படை பின்வாங்காதவரை இந்தியப் படையும் நகராது'

புது­டெல்லி: இரு நாடு­க­ளின் எல்­லைப் பகு­தி­களில் இருந்து சீனா தனது துருப்­புக்­களை திரும்­பப் பெறா­த­வரை இந்­திய வீரர்­களும் பின்­வாங்க மாட்­டார்­கள் எனத் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அண்­மைய சில வாரங்­க­ளாக இந்­திய-சீன எல்­லைப் பகு­தி­யில் கடும் பதற்­றம் நில­வு­கிறது. குறிப்­பாக லடாக் பகு­தி­யில் இரு­த­ரப்­புக்­கும் இடையே திடீர் மோதல் வெடித்­தது. இதில் இந்­தி­யத் தரப்­பில் 20 பேர் வீர­ம­ர­ணம் அடைந்­த­னர். சீனா­வுக்கு இரட்­டிப்பு உயிர்ச்­சே­தம் ஏற்­பட்­டது.

இதை­ய­டுத்து இரு­த­ரப்­புக்­கும் இடையே இது­வரை ஐந்து முறை பேச்­சு­வார்த்தை நடந்­துள்­ளது. இந்­தியா எல்­லைப் பகு­தி­யில் புதிய சாலை அமைப்­ப­தற்கு சீனா கடும் எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ளது. மேலும் இந்­திய விமா­னங்­க­ளின் கண்­கா­ணிப்­புப் பணி குறித்­தும் அதி­ருப்தி தெரி­விக்­கப்­பட்­டது.

எனி­னும் எல்­லை­யில் சீனா கடந்த பல ஆண்­டு­க­ளாக கட்­டு­மா­னப் பணி­களை மேற்­கொள்­வது இந்­தி­யத் தரப்­பில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. சீனா முன்பு எந்­தப் பகு­தி­யில் தன் படை­களை நிறுத்தி இருந்­ததோ அது­வரை படை­க­ளைப் பின்­வாங்க வேண்­டும் என்­பது இந்­தி­யா­வின் வலி­யு­றுத்­த­லாக உள்­ளது.

இதற்­கி­டையே குளிர்­கா­லம் நெருங்­கு­வதை அடுத்து லடாக் எல்­லைப் பகு­தி­யில் தனது வீரர்­க­ளுக்­குத் தேவை­யான பொருட்­க­ளைக் குவிப்­ப­தில் இந்­தியா முனைப்பு காட்டி வரு­கிறது. இது கிட்­டத்­தட்ட ஒவ்­வோர் ஆண்­டும் சியாச்­சின் பகு­தி­யில் மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கையை ஒத்து இருப்­ப­தாக இந்­திய ஊட­கம் தெரி­விக்­கிறது.

இரு­த­ரப்பு எல்­லை­யில் உள்ள பகு­தி­களில் பதற்­றம் நீடித்து வந்­தா­லும் இரு நாடு­களும் பேச்­சு­வார்த்தை நடத்­த­வேண்­டும் என சீன வெளி­யு­றவு அமைச்­சின் செய்­தித் தொடர்­பா­ளர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

எல்­லைப் பிரச்­சி­னை­யை­யும் இரு நாடு­க­ளுக்கு இடை­யே­யான எதிர்­கால உற­வு­க­ளை­யும் பிரித்­துப் பார்க்க இய­லாது என்­றும் இதுவே உண்மை நிலை. - இந்தியா

ஆனால், எல்­லைப் பிரச்­சி­னை­யை­யும் இரு நாடு­க­ளுக்கு இடை­யே­யான எதிர்­கால உற­வு­க­ளை­யும் பிரித்­துப் பார்க்க இய­லாது என்­றும் இதுவே உண்மை நிலை என்­றும் இந்­திய வெளி­யு­றவு அமைச்சு திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!